யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியை வதிவிடமாகவும் கொண்ட மெக்டலின் தோமஸ் இராஜரட்ணம் அவர்கள் 14-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை றோசமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், பிரான்சிஸ்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தோமஸ் இராஜரட்ணம்(யாழ்ப்பாணம் செல்வா ஹட்வெயர்ஸ் ஸ்தாபகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வி, செல்வன்(யாழ்ப்பாணம் செல்வா ஹட்வெயர்ஸ், சாரா இன்டஸ்ரியின் உரிமையாளர்), சுனித்தா, நியூட்டா(டென்மார்க்), கலிஸ்ரா, பிறேமிளா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
போல் பெனடிட், மஞ்சுரிக்கா, காலஞ்சென்ற யூலியன் எமாட், மற்றும் கென்றி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜீனா, கெவின், சாரா, சன்றா, சுஜீவன், ரிச்சாட், டானியேல், நான்சி, ஐஸ்ரின், பிரியா, ஜோய்ஸ்ரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சேவியர், சூசைப்பிள்ளை, சிற்றம்மா, லூயிஸ் மற்றும், சிசிலியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முத்தம்மா, லில்லி, காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் பிலுப்பையா, காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மற்றும், திரேசம்மா, யேசுதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-08-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சி மாதா பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.