3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் மீனாட்சிசுந்தரம் ராஜேஸ்வரி
1941 -
2017
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மீனாட்சிசுந்தரம் ராஜேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பம் எனும் கோவிலிலே
மனை சிறக்க வாழ்ந்த எம் அன்னையே
உயரங்கள் பல நாம் காண
எம் வாழ்க்கை பயணத்தில்
துணையாய் நின்ற எம் அன்னையே
அம்மா அம்மா என உன் பிள்ளைகள் கலங்கி நிற்க
விபரீத முடிவொன்றை தந்து
நீ சென்றது ஏனோ!
அம்மா பிறந்த நாள் முதலாக
உன் பாசமுகம் பார்த்திருந்தோம்
எம் ஆசை அம்மாவே உன்னோடு
எம் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்வோம்
என மகிழ்ந்து இருந்தோம்
ஆனால் இன்றோ எமைத் தவிக்க விட்டு
நீ மட்டும் தனியாக பயணம் செய்தாய்
எம்முடன் நீ வாழ்ந்த போது வாழ்வும்
எமக்கு வசந்தமாய் ஆனது
தெய்வத்துடன் நீ கலந்த போது
வாழ்வோ எமக்கு கசந்துவிட்டது
இதயத்தின் வேதனையும் குறையவில்லை
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
ரவிராஜ் குடும்பத்தினர்