
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Meenatchi Sabaratnam
1923 -
2023

எங்கள் அன்பான சின்னம்மா, உஙகளது மறைவு எமக்கு கவலைதரினும் நீங்கள் நிறைவான வாழ்வை வாழ்ந்தீர்கள் என ஆறுதல் அடைகின்றோம். உங்களது கணவர் இளவயதில் திடீரென மரணித்து, அவரது பூதவுடலை தம்பித்துரை மாமாவும், அழகு மாமாவும் கொண்டுவந்தது நான் சிறிய பையனாக இருந்திருந்தாலும் இன்னமும் நினைவிலுண்டு. பிள்ளைகளை மிகக் கடினப்பாடுகள் மத்தியிலும் வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்தீர்கள். ஒருதடவை கனடா வந்திருந்தபோது, அகிலனையும் கூட்டிக்கொண்டு நான் இருந்த சேர்ச்சுக்கு வந்ததை மறக்க முடியுமா? அந்த நாட்களில் உங்களது தோசை சாப்பிடுவதற்காகவே உடுப்பிட்டி வருவோம். சென்று வாருங்கள் அன்புசால் சின்னம்மா. உங்களது ஆன்மா நித்திய இழைப்பாறுதல் பெறுவதாக எனப் பிரார்த்திக்கும் இராசன் தியாகராசா, இலங்கை.
Write Tribute