யாழ். தொண்டைமனாற்றைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட மீனலோஜினி அருணகிரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய்
பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும்
ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்
கண் இமைக்குள் வைத்து
வாழ
வழிகாட்டிவிட்டு
எம்மை விட்டு பிரிந்தது ஏனோ?
கஷ்டங்கள் பல வந்தாலும்
கவசமாய்
எங்களைக் காத்தது
உங்கள் பாசம் அம்மா......!!!...!!
எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும்
இந்த சுகம் இனிக் கிடைக்காதே..!
அம்மா நீங்கள் எங்களைப் பிரிந்தாலும்…..!
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த 04.01.2026 அன்று சிவபதமடைந்த எங்கள் அன்புத் தாயார் மீனலோஜினி அருணகிரி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 03-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற உள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
கதிரிப்பாய்,
அச்சுவேலி.
We are deeply sorry for the loss of Your mother. She was a wonderful person, and her memory will live on in our hearts.