திதி : 21-02-2022
கிளிநொச்சி சங்கத்தார்வயல் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் மல்லிகாதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்க வீட்டு பேரழகு
எம்மை விட்டு போனப்போ
ஓடி வந்து எம்மருகில்
ஒன்றுபட்டு நின்றவரே
ஆர்ப்பரித்து விழி இரண்டும்
ஆறாகி ஓடையிலே
நெஞ்சம் எல்லாம் நில அதிர்வாய்
நொறுங்கி அன்று விழுகையிலே
ஆரதழுவி எம்மை
ஆறுதல் மொழிந்தவரே
தேறி நம் எழவே
தேற்றம் அளித்தவரே
மூச்சாக்கி உயிர்களையே
முன்னே கொன்று விடும்
ஆள் கொள்ளும் கொரனோ
அருகே வந்து விரட்டையிலும்
அவை மறந்து எம்மருகில்
அல்லும் பகல் நின்றவரே
இறுதி நிகழ்விலும்
இதயத்தால் கலந்தவரே
உணவளித்து எங்களுக்கு
உறுதுணையாய் நின்றவரே
துயர் எடுத்து கவி பாடி
தூரிகையாய் மொழிந்தவரே
இல்லமது வந்து அன்று
இத்துயரில் பங்கெடுத்து
கண்ணீரை காணிக்கையாய்
காலடியில் வைத்தவரே
அவை வந்து நிழல் பார்த்து
அழுதன்று களைத்தவரே
அவர்க்கெல்லாம் இன்றெங்கள்
அகமதின் நன்றிகளாம்...
03-03-2021 அன்று சிவபதம் அடைந்த மயில்வாகனம் மல்லிகாதேவி அவர்களின் அந்தியேட்டிக்கிரியை 21-02-2022 திங்கட்கிழமை அன்று முற்பகல் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் மதிய போசனத்திலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
என்றும் நன்றிகளோடு
குடும்பத்தினர்
உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்