
பதுளையைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மாணிக்கவாசகம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
சிறந்த ஆளுமையும்
உயர்ந்த இயலுமையும் - நிலை
கடந்த மனவுறுதியும்
உறைந்து வாழ்ந்த பெருமகனே!
எம்பதியில் நீர் நிலைத்து
ஐம்பதாண்டுகள் நிறைந்து சிறந்து!
எந்நிலையிலும் மாணிக்கமாய் ஒளிர்ந்து
சொந்த நிலை பிறளாத பெருந்தகையே!
பெருமையெல்லாம் எமக்கே உம்மோடு பயணித்ததில்!
மறுமையு மக்கில்லை இனி - மயி
லேறும் மன்னவன் காலடியே!
வாழும் போது உயர்ந்த வாழ்வைதனைப் போற்றினீர்
வானுறையும் தெய்வத்துள் உம் வாழ்வு நிலைக்கும்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காவடி மார்க் கற்பூர யாழ்ப்பாண விற்பனை முகவர்.
S.V. முருகேசு
154,
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
S.V. முருகேசு
D.4
மருதநகர், எமல்சன் வீதி,
கரடிபோக்கு சந்தி,
கிளிநொச்சி.
S.V.M (PVT) Ltd
No.122, Dam Road,
Colombo - 12