சுவிசைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மதூசன் தவயோகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
என் மகனே
எம்மை விட்டுச்செல்ல
அவசரம் கொண்டதேனோ
தோழுக்கு மிஞ்சினால் தோழன் என்பார்கள்
தோழன் மட்டுமல்ல
நீ என் ஆசானும் அன்றோ
உன்னில் என்னைக்கண்டேன்
என் இதயத்தின் வலியதனை
மீட்டிடமுடியதையா என் நெஞ்சினில் ஆயிரம் கேள்விகள் என் மகனே...
வாரி அணைத்து உன் இதயத்தை தொட்டிட
இருத்திவைத்து இதமாக உள்ளத்து கிடக்கையெல்லாம்
உரையாடி மகிழ்ந்திட
உன் ஆற்றல் மிகுந்த அரசியல் பார்வையும்
அறிவான தெளிவான திடமான சிந்தனையும்
கற்றோர் கல்லாதோர்
சிறியோர் பெரியோர்
என்ற பேதமே இல்லாது உன் வசீகர முகத்தில் மலரும் புன்னகையுடன் கனிவுப்பார்வையில் கவனமாக உரையாடும் அந்த அழகுக் கண்ணணை கண்குளிர கண்டிடமாட்டேனோ
கனிவாய் இருவார்த்தை பேசிட மாட்டேனோ....
அப்பா என்கின்ற அந்த அழகிய குரல் மீண்டும் மீண்டும்
ஒலித்திட மாட்டாதா மகனே..
நீ எம்மோடு வாழ்ந்த நொடிகளிங்கு
நொரிங்கியதேனோ
கண்முன்னே கண்ட காட்சிகள் அனைத்தும் கானலாய்ப் போனதோ....
நீங்கள் மூவரும் வாழும் வாழ்வதனைக்கண்டு
மனம் மகிழ்ந்தது மட்டுமன்றி
எனக்குப் பிறகு
உன் உடன் பிறந்த
அக்காவும் தங்கையும்
உன் நிழலில் இருப்பார்கள்
என்றெல்லோ எண்ணி
காலமதை களித்துவந்தேன் ஆனால் காவலனாய் நிற்காது காலனுடன் சென்றதேனோ....
எத்தனை தடவை என் கடந்துவந்த கடுமையான வாழ்வின் மகத்தான அனுபவத்தை எடுத்துரைத்து வலிமைமிகுந்த மனிதர்களாய் உருவாக்கி எடுத்தேனே .
இந்த சமுதாயத்தில் நல்மனிதனாய் வாழும் தகுதி
உனக்கிருந்ததை கண்டு பெருமிதம் கொண்டேனே
என் மனக்கோட்டையிலே உனக்காக கட்டிவைத்த ஆயிரம் ஆயிரம் கனவுகள் அத்தனையும் சிதைந்து போனதுவோ......
என் மனவலிதனை எப்படி உனக்கெடுத்துரைப்பேன்
எத்தனை யென்மங்கள் மாறினாலும் உன் நினைவை மாற்றிடமுடியாது
மௌனமாய்ச்சென்ற என் மகனே உன் மனம் அமைதி கொள்வாய்.....
உன் ஆத்மா அமைதி கொள்ளட்டும் ...
அமைதியாய் உறங்கய்யா.....
நாம் இனி உன் நினைவுகளோடு உன்னைத்தொழுது வாழ்வோம்
எமக்கான மனவலிமையை நீதான் எமக்கு அளிக்க வேண்டும் மகனே
ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி ......
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Sutha and Family, We are so sorry for your loss. We can’t imagine the pain you’re feeling. Our deepest sympathies to you and your family. Visahan & Shyla