 
                    யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசாவிளானை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த மத்தேசு தேவசகாயம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 
அன்புக்கு இலக்கணமாக அவனியில் 
வாழ்ந்து பண்புடமை காத்து பக்குவமாய் வழிநடத்தீர் 
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகைபல செய்து 
எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாக நடந்தீர்கள்
உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்றோம்
பாசத்திலும், நேசத்திலும் என்னலம் காத்தவரே 
கரம்பிடித்து வழிநடத்தி மகிழ்ந்தவரே
எமதருமை அப்பாவே
எனதன்னை தனை அளித்தவரே
வாழ்விலும் தாழ்விலும் அரவணைத்தவரே
வான் வீட்டில் இருந்தாலும்
 தேன் சொரியும் உம் புன்னைகையோ 
மறக்க முடியுமா?
நீங்கள் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் 
உங்கள் நினைவுகள் எம் நெஞ்சை 
விட்டு அகலாது 
நேர்வழியில் நின்று புவியினில் 
எம்மையெல்லாம் புகளோடு வாழவைத்தீர்
நீங்காத நினைவுகளாய் பதிந்துவிட்டு 
எம் உள்ளத்தில் ஆண்டுகள் பத்து போனாலும் 
எங்கள் நினைவில் வைத்து பூஜிக்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும் 
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், 
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
 
                     
         
                     
                    