1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 05-07-2024
யாழ். வண்ணார்பண்ணை வட மேற்கு நீராவியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மதியாபரணம் புஸ்பராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எமை விட்டு நீங்கள் மறைந்து
ஓராண்டு சென்றதம்மா
இன்று வரை விழிகளிலே
நீர் துளிகள் ஓயவில்லை
தனிமையிலிருந்து தத்தளிக்கும்
தனி மரமாகிவிட்டேன்- நீ
தள்ளிச்சென்றதால்- என் கனகமே...
தாங்கமுடியவில்லை
கண்ணீர் விட்டழுதால் நெஞ்சில்
கவலைகள் தீரும் கொஞ்சம்
தண்ணீர் விட்டாலும் காய்ந்த
பூங்கொடி தழைத்தல் போல
வெண்ணீலமான கண்ணில்
விழுகின்ற அருவியோடு
உன்மீது கொண்ட பாசம்
உள்ளத்தை வாட்டுதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்