திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். சரசாலை வடக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாதவராஜா சத்தியேந்திரன் அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று திருகோணமலையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாதவராஜா(சட்டத்தரணி), சீதாதேவி தம்பதிகளின் இளைய மகனும், சரசாலை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கங்காதரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிசேக் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிறீரங்கன்(கனடா), சிறீபவன்(அவுஸ்திரேலியா), சிறீயோகேந்திரன்(கனடா), அரவிந்தன்(இலங்கை), சுபோதினி( சட்டத்தரணி- கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
யோகேஸ், சர்மலி, சுபோ, குமுதா, கேணல் இலட்சுமன் டேவிட், சற்குணம், மங்கை, அம்பிகை, காலஞ்சென்ற மகிழ்னன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தக்ஷாயினி, கிருஷ்ணமூர்த்தி, இலங்கேஸ்வரன் ஆகியோரின் சகலனும்,
அஜய், அஸ்வின், அம்ரித், மாதங்கி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சயந்தன், மகி, அட்ரிகா, அஸ்விகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பவித்திரன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-09-2020 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was so shocked to hear the sudden demise of my friend Sathiy. We met in the YMCA in the 1980's and he was a true friend a friendship i remember and cherish Remembering his wonderful and gentle...