Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JAN 1955
இறப்பு 30 OCT 2020
அமரர் மாசில்லாமணி வியற்றிஸ் ஞானப்பிரகாசம் (நிர்மலா)
வயது 65
அமரர் மாசில்லாமணி வியற்றிஸ் ஞானப்பிரகாசம் 1955 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மட்டக்களப்பு மாநகர் 16  புனித மைக்கல் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாசில்லாமணி வியற்றிஸ் ஞானப்பிரகாசம் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மட்டக்களப்பைச் சேர்ந்த ஞானப்பிரகாசம்(ஓய்வுநிலை கிராம சேவையாளர்), காலஞ்சென்ற லூர்துமேரி குரூஸ்(ஓய்வுநிலை ஆசிரியை) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், மட்டக்களப்பைச் சேர்ந்த சின்னையா காருண்யம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாசில்லாமணி சின்னையா(Auto Plus Nirmala- Montreal) அன்பு  அவர்களின் மனைவியும்,

அனற் றெனற், காமலின், நிமலன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

இம்மானுவேல்(Toronto), காலஞ்சென்றவர்களான மறினா, மார்சலினோ(ஞானம்) மற்றும் மார்சிலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ராதா கிருஸ்ணன், உமா சங்கர், டிரேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நவின் குமார், பிரவின், ரம்யா, கவிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Live: Click Here
Password: 20201101D

கொரோனா தொடர்பான அரசாங்கத்தின் சட்ட விதிகள் கடுமையாக அமுல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றை ஒவ்வொருவரும் தவறாது முக்கியமாகக் கடைப்பிடிக்குமாறு தயவோடு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices