9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேரி திரேசா யேசுதாசன்
(அரியமலர்)
வயது 79
அமரர் மேரி திரேசா யேசுதாசன்
1937 -
2017
கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி திரேசா யேசுதாசன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா ஒன்பது ஆண்டு கரைந்ததம்மா
உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு
என்றும் பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின் அர்த்தம் புரிந்த
அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!
கள்ளம் கபடமற்ற உள்ளத்தில் உதித்த எம்மை
கண்கண்ட தெய்வமாய் காத்தவள் நீ அம்மா!
உங்கள் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்..
தகவல்:
குடும்பத்தினர்