யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி செல்வ சறோஜினி தேவதாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் வாழ்க்கையின் அடித்தளம்,
அன்பும் பொறுப்பும் இணைந்த உருவம்
அம்மா நீங்கள்…
எளிமையிலும் உயர்வை கற்றுத் தந்தவர்
மௌனத்திலும் அர்த்தம் நிரப்பியவர்,
உங்கள் வாழ்வு
எங்களுக்கு வழிகாட்டும் தீபம்…
குடும்பம் எனும் வட்டத்தை
தியாகத்தால் கட்டியவர் நீங்கள்,
எங்களை முன்னேற்ற
தன்னை
மறந்த உயர்ந்த மனம்…
நாட்கள் 31ச் சென்றாலும்,
நீங்கள் விட்டுச் சென்ற
நற்பண்புகளும் நினைவுகளும்
ஒரு முழு வாழ்நாளுக்கு சமம்…
உடல் இங்கு இல்லையெனினும்,
உங்கள் ஆசிகள் எங்களோடு,
உங்கள் பெயர்
எங்கள் செயல்களில்
வாழ்கிறது…
ஆழ்ந்த மரியாதையுடனும்
என்றும் மறையாத நினைவுடனும்
உங்களை வணங்குகிறோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.