யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி ராஜேஸ் செல்வக்கோன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது Funeral Home வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், போதகர்மார்களுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் எமக்காக ஜெபித்தவர்களுக்கும், பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.