யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிபுஸ்பம் பெர்னாண்டோ அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அடுத்த பிறநய்பொன்றுஇருப்பின் நீ ஆளுகின்ற தேசத்திலேவாழவேண்டும் வாழவேண்டும் எமது தாய்க்கு நிகர் தாயான உமது மடியில் தவழவேண்டும் அம்மம்மா அதைவிட சொர்க்கம் எமக்கேது இவ்வுலகில், உமது பிரிவில் தனிமையில்...