
திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு தூவணை கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி பரமநாயகி நாகராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நித்திலப் பைங்கிளி சித்திரைப் பௌர்ணமி
வித்தக நட்பினள் எத்திசை செல்லினும்
சொந்தமும் பந்தமும் வந்து றவாடும்
நந்தவ னம்தான் நறுநகை பாமா!
இகத்தின் சகாப்த நினைவே!
அகத்தால் தருகிறோம் அஞ்சலி அன்பே!
பத்தாண்டுகள் கடந்தாலும்
ஆறாத துயருடன் - நாங்கள்
நினைக்க நினைக்க
நாடி, நரம்பு விறைக்கிறதே
நடந்தது கனவாக மாறவேண்டுமென
இறைவனை கெஞ்சுகிறதே...
கலப்படம் இல்லா உன் அன்பு
கலங்க வைக்குது எமை இங்கு
எங்களைத் தனிமையில் விட்டதில்லை
இன்றோ தவிக்க விட்டுச் சென்று விட்டாய்
உனைப்பிரிந்து உறவுகள் வாடுதம்மா
உன் சிரிப்பின்றி உறவுகள் உறங்கவில்லை
உன் பிரிவு ஒரு கனவா நிஜமா
என நம்பமுடியவில்லை
எங்களால் ஜீரணிக்க முடியவில்லை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!