யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி மெக்டலின் யோகராணி அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பில் கர்த்தருக்குள் நித்திய இளைபாறுதல் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மொறிஸ் பொன்ராசா, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை, அக்கினேஸ் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அன்ரன் ஆனந்தராஜா(விஜயா) அவர்களின் அன்பு மனைவியும்,
டள்சி(பிரான்ஸ்), அன்ரனி ஒஸ்கார், அன்ரனி டஷான், ஒஸ்வியா, அனற் சிந்துஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டீன் டிலோஷன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
தங்கராஜா(கனடா), சந்திரா(யாழ்ப்பாணம்), தங்கராணி(பிரான்ஸ்), பத்மராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சாளெற், இராசநாயகம், மனோ ரஞ்சித், மனோன் மற்றும் வைலற், சோதி, லூர்துமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 31-08-2019 சனிக்கிழமை முதல் 04-09-2019 புதன்கிழமை வரை 38 Galison Mawatha, Negombo எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து புதன்கிழமை பி.ப 3:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் நீர்கொழும்பு புனித செபஸ்ரியார் தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் நீர்கொழும்பு பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest and most heartfelt condolences at this most challenging time. From: jean , Vogiya, Reno (Germany)