4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மேரி லெற்றீசியா அந்தோனிப்பிள்ளை
(மலர்)
வயது 64

அமரர் மேரி லெற்றீசியா அந்தோனிப்பிள்ளை
1956 -
2020
இளவாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
52
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி லெற்றீசியா அந்தோனிப்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
நான்கு ஆண்டுகள் ஆனதம்மா - ஆனால்
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை அன்னையே
நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
உன்னதமான அன்னையே - உங்கள்
உடல் மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்