யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், 5ஆம் குறுக்குத்தெருவை வதிவிடமாகவும் கொண்ட மேரி அஞ்சலா நடராஜா அவர்கள் 07-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை(வலோரி) மேரிமாகிறேற்(ரட்ணம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசப் நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானராஜா, ஞானேந்திரன், ஞானசேகர், ஞானபாஸ்கரன், சுபோஜினி, ஞானச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பவளம் வேதநாயகம் மற்றும் றுக்மணி சிறில், காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பெனோ, ராஜன் மற்றும் அன்ரன்(பபா), சுவினிதா செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அஞ்சலின், ஜெயந்தி, சந்திரிக்கா, யாழினி, ஜீவேந்திரா, எனில்டா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அனோஜ், சந்தோஷ், அபினேஷ், தர்ஷன், துஷ்யந்தன், சுலக்ஷன்,நிலான், அனிஸ்ரன், வர்ஷா, நத்தாஷா, அஸ்வின், பிரவின், ஷரோன், தாமிரா ஆகியோரின் நேசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-03-2020 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து யாழ். அடைக்கலமாதா(OLR) ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.