Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 OCT 1949
இறப்பு 16 APR 2021
அமரர் மேரி அஞ்சலா மரியாம்பிள்ளை (மாங்கண்டு)
வயது 71
அமரர் மேரி அஞ்சலா மரியாம்பிள்ளை 1949 - 2021 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Nyborg ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி அஞ்சலா மரியாம்பிள்ளை அவர்கள் 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அமிர்தநாதர், செபமாலைஅம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சவரிமுத்து, அநந்தாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சவரிமுத்து மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

மாசில்லாராணி(ஜேர்மனி), ஞானசீலன்(டென்மார்க்), ஜெயசீலன்(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மேரி பெர்ணதேத்தம்மா(ராணி), மரியமலர்(மலர்), மேரி ஐலின்(புஸ்பம்), எட்வேட் இராசவரோதயம்(சற்குணம்- பிரான்ஸ்), மேரி பவளராணி(பவளம்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மரியதாஸ், அந்தோனிப்பிள்ளை(துரைசிங்கம்), இக்னேசியஸ், அருள்தாஸ், ஞானமலர், யோசவாஸ் பீற்றர் ஆகியோரின் மைத்துனியும்,

மரியதாஸ்(துரைஐயா- ஜேர்மனி), மேரி வியோனி(டென்மார்க்), அனித்தா(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயக்கொடி, ஜெயராணி, ஜெயமலர், மதி, பொன்ராசா, மாவீரர் றொக்கேட் , அகிலா, அரவிந்தன், யசோ, குமுதா, பரிதா, சரிதா, அமல்ராஜ், கனிதா, விக்டர், அன்பரசி ஆகியோரின் பெறாத்தாயும்,

தயான், தயாளினி, தயானா, தயாளன் ஆகியோரின் பாசமிகு மாமியும்

செயான்ஸ்- யூலியா, செயாரினா, செயாரன்ஸ், நிகான், நிறோகன், யோசுவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கீஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos