

திதி: 27/07/2025
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மருதப்பு செல்லத்தம்பி அவர்களின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு
எங்களின் இறைவனாய்- என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
நாற்பது ஆண்டுகள் போனாலும்
நாற்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள் அழியாமல்
இருக்க வேண்டும் என்பதால்
வாழ்நாள் முழுவதும் நினைக்கும்
போதெல்லாம் உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்
கரைகின்றதப்பா..!!
வாடி நிற்கின்றோம் நாம்
எத்தனை ஆண்டு சென்றாலும்
உங்கள் நினைவுகள் எங்களுடன் வாழும்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை