
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டங்குளம் துணுக்காய், கிளிநொச்சி உதயநகர் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மருதலிங்கம் பத்மநாதன் அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதலிங்கம் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், முருகப்பர் பத்தினிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானசோதி(முன்னாள் துணுக்காய் வலய ஆரம்பகல்வி ஆசிரிய ஆலோசகரும், தற்போது கிளி/மத்திய ஆரம்ப வித்தியாலய ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிந்தன்(மொறட்டுவ பல்கலைக்கழகம்), மோஜிந்தன்(யாழ் பல்கலைகழகம் கிளிநொச்சி), பகிந்தன் சுகுணதாஸ், வேணுஜா(கிளி/கிளிநொச்சிமத்திய மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணம், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மங்கையற்கரசி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, மருதையினார், கோவிந்தன் மற்றும் சண்முகநாதன், புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இல. 249 உதயநகர் கிழக்கு கிளிநொச்சி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன். சண்முகரத்தினம் மனேஜர் கனடா