

முல்லைத்தீவு புதுமாத்தளனைப் பிறப்பிடமாகவும், சங்கரப்பிள்ளை வீதி இறம்பைக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட மாற்குப்பிள்ளை மரியதிரேசா தங்கரத்தினம் அவர்கள் 03-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சில்வெஸ்ரர் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோசேப்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாற்குப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை, மேரிமாகிறேட், யோர்ஜ், யோசேப் பொன்ராசா, பென்ஜமின் மற்றும் மேரிஜோசேப்பின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுவலீனா பாக்கியம், தைரியநாதர், அந்தோனியாப்பிள்ளை, அரியம்மா, கிறிஸ்ரபெல், சண்முகம், அருளானந்தம், அக்கினேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மரியநாயகம்(லண்டன்), மரியமலர்(லண்டன்), அருட்சகோதரி புனிதராணி(நல்லாயன் கன்னியர் சபை, கணேசபுரம்), மரிய கொறற்றி(லண்டன்), அருட்சகோதரி செபா(திருச்சிலுவைக் கன்னியர் சபை, மடு), மரியமோட்சசலாக்கினி(லண்டன்), மரிய கிறிஸ்ரின்(பிரதி அதிபர், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை), மரிய நாயகி(ஆசிரியர்- வவுனியா கோவில்க்குளம் இந்துக்கல்லூரி), சகாயராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சோதிநாதர் அவர்களின் பாசமிகு சின்னம்மாவும் ஆவார்,
ஜெயமணி(லண்டன்), தேவராசா(லண்டன்), சந்திரசேகரம்(லண்டன்), காலஞ்சென்ற வரதராசா, சாள்ஸ்ஜெயக்குமார், தேவதாஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மேரி நிமால்ஷியா, மேரி வினோஜா, ஜஸ்ரின், இவ்ளின், மெல்வின், ஆசா, சுபவரதன், சுபதர்ஷா, சுபமகிஷா, நிமல்டன், சஜின், டனோஜன், துஷான், லதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாத்விகா, சஸ்விகன், துருத்திகா, மதுரிகா, லெய்டன், சத்வித், ஜெய்டன், ஜெய்சன், ஆரோன், மிதுசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 10:30 மணியளவில் இறைம்பைக்குளம் புனித அந்தோனியர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447735219801
அம்மம்மா….. ! ஆண்டுகள் பல ஆயினும் மறந்திட முடியுமா உங்களை…. உங்களுடனான எனது நினைவுகள் பல பல… மறந்திட முடியுமா…. அவைகளை? உங்கள் ஞாபகமாக நீங்கள் தந்த பரிசுகள் இன்னும் பத்திரமாக என்னுடன் …....