யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு வேதாரணியம் அவர்கள் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிங்கேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிருபன்(ஜேர்மனி), ஆசா(கனடா), நிறோசா(ஆசிரியை), தர்சன்(ஜேர்மனி), சரண்யா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவீனா, அமுதீஸ், துஷ்யந்தன், சிந்துயா, விதுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அயீஸ், ஆகாஷ், இனியா, வெண்ணிலா, தரணிகா, துஷாந், கதிரவன், முகின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சறோயினிதேவி, பேரானந்தம் மற்றும் விமலாம்பிகை, புவனேஸ்வரி, டைனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்லமணி, அன்னலட்சுமி, குணரத்தினம் நவரத்தினம் மற்றும் இராசமணி, தவமணிதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.