

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், புளியங்குளம், குருமன்காடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சொர்ணலட்சுமி அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பர்வதம் தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மார்க்கண்டு(தபாற்சேவகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாமதி, ரேவதி(ஓய்வுநிலை அதிபர்- வ/புளியங்குளம், இந்துக்கல்லூரி மற்றும் வ/கனகராயன்குளம் மகாவித்தியாலயம்), சுகந்தி(கனடா- முன்னாள் ஆசிரியை, வ/புளியங்குளம் இந்துக்கல்லூரி), தேவகி(கனடா- முன்னாள் ஆசிரியை, வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), வாசுகி(ஓய்வுநிலை ஆசிரியை- வ/தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்), சியாமளா(கனடா- முன்னாள் முகாமைத்துவ உதவியாளர்), நந்தினி(சுவிஸ்- முன்னாள் ஆசிரியை, வ/மதியாமடு வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வில்வராஜா(பம்பைமடு), கிருஷ்ணமூர்த்தி(முள்ளியவளை), யோகேந்திரன்(கனடா), விக்னேஸ்வரன்(கனடா), மகிந்தன்(கனடா), மணிவண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
அருந்ததி, ஆரூரன், திவ்யன், திவ்யா, வித்யா, அபிநயன், ஆரணி, சாரண்யா, சயானி, ஆரணன், வித்யாசாகர், ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதுல்யன், அகரா, அகவன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணி முதல் இல. 70/17, காளிகோவில் வீதி, குருமன்காடு, வவுனியா இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, she was such a great person, The memories will live forever with us. Vijeyan Sivanathan family, Paris, France