1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
புங்குடுதீவை பூர்வீகமாகவும், கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு சாந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள்
பல செய்துவாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் தான் தெரிகிறீர்கள்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!
அன்பான குடும்பத்தின் குல விளக்கே!
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
We are honoured and blessed to have known this beautiful soul. Our condolences.