Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 19 DEC 1938
இறப்பு 30 JUN 2026
திரு மார்கண்டு பொன்னம்பலம்
வயது 87
திரு மார்கண்டு பொன்னம்பலம் 1938 - 2026 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வதிவிடமாகவும், ஜேர்மனி Geilenkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்கண்டு பொன்னம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 ஆறாது ங்கள் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்!!

ஆயிரம் பேர் ஆறுதலில் ஆறினாலும்
உங்கள் பிரிவை நெஞ்சம் மறுக்குதப்பா!
நேற்றுப் போல் இருக்கின்றது
நாங்கள் வாழ்ந்த இன்ப வாழ்க்கை நினைவுகள்
யார் கண் பட்டதோஎங்கள் குருவிக்கூடு கலைந்தது! 

அன்பிற்கே சாவு என்றால் அகிலமே தாங்காதப்பா!
என்னுயிர் அப்பா வந்து விடுங்கோ!
ஏங்கி நாம் தவிக்கின்றோம். 

இந்த மண்ணில் உம்மைப் போல் யார் வருவார்?
ங்கள் துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்!!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.