
யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy-Pontoise ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு மனோகரசீலன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 13-11-2021
அப்பா!!
அன்பான வதனமும்
ஆனந்தப் புன்சிரிப்பும்
இணையில்லா மிடுக்கும்
“மனோன்” என்ற பேரானந்தம்
எங்கள் தந்தையே!
எமை விட்டகன்று
ஆண்டு ஐந்து ஆனதுவோ??
திரும்புகின்ற திசையெங்கும்
உங்கள் பேச்சு
விடிகின்ற பொழுதெல்லாம்
உங்கள் நினைவு
உன்னதப் பிறப்பு ஒன்று
எமை விட்டு நீங்கியதாய்
எண்ணிட ஒரு நாளும் தோன்றவில்லை!!
நின் பெயர் சொல்லி நித்தமும்
உறவாடும் உறவுகளில்
நித்தியமாய் வாழ்கின்றீர்கள்
இதுவல்லோ பெருவாழ்வு!!
ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
ஆயுள் உள்ள காலம் வரை- அப்பா
உங்களைப் போற்றிடுவோம்!!
“வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படுவர்”
வள்ளுவர் வாக்கமைய வாழ்ந்து
இறையடி இணைந்த தந்தையே
எல்லாம் வல்ல இறைபாதம் பணிந்து
உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்!!