யாழ். கோண்டாவில் பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 05 ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மகேஸ்வரி அரசரத்தினம் அவர்களின் 100வது பிறந்தநாள் நினைவஞ்சலி.
எங்கள் ஆருயிர் அன்னையே
நாங்கள் சுகமாகத் திடமாக சீருடன் சிறப்புடன்
வாழ எம் அருமைத் தந்தையுடன்
இணைந்து
உங்கள் கடமைகளைச்
சரிவரச் செய்து
எங்களை வளர்த்து ஆளாக்கியதை
நன்றியுடன்
நினைத்துப் பெருமைப்படுகின்றோம்!
இல்லாள் அகத்திருக்க
இல்லாதது ஒன்றும் இல்லை
என்ற மூதுரை வாக்குக்கு ஏற்ப
உணவா, உடையா,
கல்வியா, கலைகளா, கைமருந்தா
எதிலுமே
குறைவைக்கவில்லை அம்மா நீங்கள்...
அதிகாலை எழுந்து ‘வளர் வளர் சுகம் சுகம்’
சொல்லி
நீராட்டி உடுத்தி அழகு பார்த்து
பள்ளிக்கு
அனுப்பி எங்களை உயர்த்திய
உங்கள் அன்பும்,
அறிவும், பண்பும், பலமும்
இன்றும் எம்மனதில்
உயிரோட்டமாக விளங்குகின்றது!
எங்களை நிறைவோடு வாழவைத்துக்
கொண்டிருக்கும்
எங்கள் அழகிய அம்மாவை
கண்களில் நீர்பனிக்க
நெஞ்சம் நெகிழத்துதித்து வணங்குகிறோம்!!!
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details