கிளிநொச்சி திருநகரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham, Nottingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு கணேசமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மாந்த நேயத்தை மனதினிலே வரித்தவனே
மனிதமே உலகமென வாஞ்சை கொண்டவனே
யாவரும் வாழ்கவெனும் நல்லுளம் படைத்தவனே
நீயோ வாழாது இவ்வுலகம் துறந்தனையோ ஐயா!
அன்னை முகமதனை பார்க்க முடியவில்லை
அருகே இருந்து எம்மால் ஆற்றவும் முடியவில்லை
உன் நினைவே என்னாளும் கொண்டவராய் எம் அன்னை
ஆறாத் துயரினிலே துடிப்பதை நீ அறிவாயோ!
கடைக்குட்டியாய் வந்து கண்ணீரில் துடிக்கவிட்டு
பிரிந்து சென்றதேனையா அறியாது துடிக்கின்றோம்
நினைவுகளில் நிறைந்துவிட்ட எங்கள் இளவலே
நெஞ்சப் பசுமையிலே என்றும் நிலைத்தாயே!
அன்புத் தம்பியே நண்பனாய் நகையுறு பேச்சுடையாய்
இனியென்றும் நாமதனைக் கேட்கத்தான் முடியுமா(?)
கலங்குதலும் நினைவுகளில் துலங்குதலும் தொடர
இயற்கையோடிணைந்து இறையுள் அமைதி கொள்வாய்!
நின் பிரிவுத்துயர்மாறா நினைவுகளோடு......
அம்மா, சகோதர்கள் மற்றும் அண்ணிமார்,
உற்றார் உறவுகள்......
எமது தம்பியின் இழப்பின் துயர்மிகு வேளையில் எம்மோடு பல்வகைமைகளிலும் கரம்கோர்த்து நின்ற உற்றார், உறவுகள், நண்பர்கள், லங்காசிறி ஊடகத்தினருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் தங்களனைவரதும் கரம்பற்றி நன்றியுரைக்கின்றோம்!
May his soul rest in peace 🙏 Ravi Sithappa, please accept our condolences. May god give you the strength to heal this loss.