யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சிறுவிளான், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
கணவனாய், அப்பாவாய், அண்ணனாய்,
மாமனாய், தாத்தாவாய், பெரியப்பாவாய்
பாசமே வேதமாய் எமை ஆட்கொண்டீர்கள்
அதனால் தானோ நித்தம் எம்
உள்ளத்தினுள்ளே வாழுமோர்
உன்னத தெய்வமாகிவிட்டீர்கள் அப்பா
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..