யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் சுவாம்பிள்ளை அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேலு மரியநாயகம் சுவானிப்பிள்ளை கைதம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவப்பரகாசம் ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யோண் மரியநாயகம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
திருச்செல்வம்(இலங்கை), காலஞ்சென்ற இராசநாயகம், மரியராசா(கனடா), மகேந்திரா(இலங்கை), மனோகரன்(இலங்கை), செல்வராணி(இலங்கை), ரஞ்சினி(கனடா), ராஜினி(இலங்கை), அன்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசிக்கா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
யெய்சன், யெய்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”
(யோவான் 11:25)
உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
எங்கு தான் சென்றாயோ?
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!