முல்லைத்தீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் ஆசீர்வாதம்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்குஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், யாழ் ஆயர் அருட்தந்தையர், அருட்சகோதரிகள் மற்றும் உறவுகள் தொலைபேசி மூலமாகவும், சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Our deepest sympathies to his family & May his soul Rest in peace