

-
02 AUG 1948 - 22 MAR 2012 (63 age)
-
பிறந்த இடம் : கட்டைக்காடு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கட்டைக்காடு, Sri Lanka
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரிறோஸ் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதிரத்தைப் பாலாக்கி உயிர்தனை தினம் தந்து
குழந்தைகள் வாழ்வுக்காக தினம் தன்னைத் தியாகம் செய்பவள்
பகல் முழுவதும் அடுப்படியில் புழுவாக வெந்து
இரவு முழுவதும் விளக்காக விழித்திருந்து
தன் பிள்ளைக்காக உறக்கம் துறந்து
குழந்தையின் மகிழ்வில் மகிழ்ந்திருப்பாள்
காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே...!
அவளை என்றும் மனதில் சுமப்போம்....
22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று கட்டைக்காடு புனித கப்பலேந்திமாதா ஆலயத்தில் இடம்பெறும் இரங்கல் திருப்பலியிலும் மற்றும் அன்னாரின் இல்லத்திலும், பிரான்ஸில் உள்ள மகன் சாந்தனின் இல்லத்திலும் நடைபெறும் மதிய, இரவு போசன நிகழ்விலும் கலந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் வண்ணம் தங்களையும் தங்கள் குடும்ப சகிதம் அன்புடன் அழைக்கின்றோம்.