10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மரியாம்பிள்ளை அன்ரன் தவபாலன்
வயது 56
அமரர் மரியாம்பிள்ளை அன்ரன் தவபாலன்
1958 -
2014
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் அகல் விளக்கே
எங்கள் குடும்பம் என்னும் கோட்டையில்
காவலனாய் வாழ்ந்த எம் அருமை தந்தையே
ஆண்டு பத்து பறந்தோடிய போதும்
எம் துயரம் எம்மைவிட்டு அகலவில்லை!
விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!
துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும்
உலகில் துளி கூட துவழாமல் எம்மை
தூக்கி விட்ட தந்தையே!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
புளோரா ரெறன்சியா தவபாலன் மற்றும் பிள்ளைகள்
I saw you uncle as a honourable man. By then it had already been 10 years. I can't believe it. Thank you so much for raising ur wife and kids as prayer warriors. Special thanks to your wife as my...