வவுனியா ஆசிகுளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து சிதம்பரப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்புள்ள ஐயா!
உங்களை நினைக்கும் போது
வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாலும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது
காலங்கள் பல கடந்தாலும்
உங்கள் ஞாபகங்கள்
எங்களை விட்டு மறையாது
உங்கள் பிரிவால் துடிக்கும் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
நாம் கலங்கி நிற்கின்றோமே
வாராயோ ஒருமுறை முகம் காட்டாயோ
என்று தவியாய் தவிக்கின்றோம்
எங்காவது உங்கள் குரல் கேட்காதா
என்று தவிக்கின்றோம்
நீங்கள் மறையவில்லை
என்றும் எங்களுடன்தான் இருப்பீர்கள்
உங்களின் ஞாபக்தில் நாங்கள் வாழ்த்திடுவோம்!