

வவுனியா வாரிக்குட்டியூரைப் பிறப்பிடமாகவும், உக்குளாங்குளம் சிவன்கோவில் அடியினை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து இராஜேந்திரம் அவர்கள் 19-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, சிவலோசினி தம்பதிகளின் புதல்வனும், மாசிலாமணி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தினி(வ. சைவப்பிரகாசா ஆரம்ப பாடசாலை ஆசிரியை), திவியா(ஊடகவியலாளர்- வவுனியா), ஜெயந்தினி(தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய ஆசிரியை), தாரணி(அவுஸ்திரேலியா), விமல்ராஜ் ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற அல்லிராசா, தங்கம்மா, சந்திரா, மணிமாறன் ஆகியோரின் சகோதரரும்,
சிவகுமார், விநாயகமூர்த்தி(வ.தபாலகம்), சிவகுமார், சிறீகாந்தன்(அவுஸ்திரேலியா), தர்மிகா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப. 01:00 மணியளவில் வாரிக்குட்டியூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.