5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ். இராமநாதன் வீதி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொணட மாரிமுத்து பொன்ராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு தெய்வமே!
ஐந்து ஆண்டு கடந்தும்
ஓயவில்லை உம் உயிருள்ள
நினைவுகள்
அன்பாய் கதைக்
கூறி அழுத்தமாய்
அரவணைத்து
அனுபவத்தை அறிவுரையாக்கி
எமது வாழ்வின் வழிகாட்டியானீர்!
குருதியை வியர்வையாக்கி
கடமையை போர்வையாக்கி
விழுதாயிருந்து கழுகாய் காத்தீரே!
சொல்லாமல் பிரிந்ததேனோ
திரும்ப முடியாப் பாதையிலே!
நெடுவழிப் பயணம் செய்த
நீர்
பயணிக்க முடியவில்லையென
பாதியிலேயே சென்றுவிட்டீரோ!
இம் மண்ணை விட்டு
இல்லை
பயணம் முடிவுப்பெற்றதென
சென்று விட்டீரோ விண்ணிற்கு
கண்களில் நீர் சூழ கலங்கி
நிற்கின்றோம்
உம் நிழற்படம் முன்னே...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்