Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 14 DEC 1959
மறைவு 30 APR 2022
அமரர் மரியஸ்ரெல்லா ஜெயசீலி ஜோசப் (ஜெயமணி)
வயது 62
அமரர் மரியஸ்ரெல்லா ஜெயசீலி ஜோசப் 1959 - 2022 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், எசன் - ஜேர்மனி, லண்டன் - பிரித்தானியா, சூரிச் - சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியஸ்ரெல்லா ஜெயசீலி ஜோசப் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
-(லூக்கா 23:43)  

ஆண்டொன்று ஆனதம்மா
ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
விண்ணுலகில் வாழ்ந்திடினும் நினைவுகளால்
எம் மனதில் வாழ்கின்ற எம் குல விளக்கே! தெய்வமே!

பண்ணிய பாவமென்ன உங்களைப்
பறி கொடுத்துத் தவிக்கின்றோம்
பிரிவு என்னும் தண்டனையால்
நிதமும் நிம்மதி இழந்து துடிக்கின்றோம்

மனிதத் துயரங்களுக்குள் அடங்காத துயரமிது
மீட்சி பெற முடியாத சோகமிது
நீங்கள் தொடுவானத்தின் மின்னலல்ல எம்
இதய வான் பரப்பில் ஒளி வீசும் துருவ நட்சத்திரம்

நீங்கள் வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும்
சுமக்கின்றோம், சுமப்போம் உங்கள் நினைவுகளை
எம் இதயப் பெட்டகத்தில்
அடுத்த ஜென்மம் ஒன்று உண்டெனில் நீங்கள்
எம்முடன் இணைந்திட வேண்டுகின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்