1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மரியநாயகம் ஜெகநாதன்
1963 -
2022
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியநாயகம் ஜெகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 09-03-2023
நீங்கள் இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
நீண்டதோர் உலகினில்
உங்களைப் பிரிந்ததாலே
நிம்மதியிழந்து தவிக்கின்றோமய்யா!
“ஆண்டாண்டு தோறும் அழுதுபுரண்டாலும்
மாண்டார் வருவரோ” என்றாலும்
நெஞ்சம் ஏற்குதில்லை அப்பா
வானுலகம் சென்றாலும் எம் வழித்துணையாய்
என்றும் இருந்துவிடுங்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்