Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 22 JAN 1929
இறைவன் அடியில் 31 MAR 2022
அமரர் மரியாம்பிள்ளை பீற்றர் போல் (இராஜரட்ணம்)
Warrant Officer in Sri Lankan Air Force
வயது 93
அமரர் மரியாம்பிள்ளை பீற்றர் போல் 1929 - 2022 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை பீற்றர் போல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அமைதியான புன்சிரித்த முகமும்
அயராத உழைப்பும் - உறவுகளை
ஆதரிக்கும் உள்ளமும் வளமான வாழ்வுக்கு
அன்பால் கிடைத்த வரமே
அவனியை விட்டு நீங்கி-இன்றோடு
ஆண்டு ஒன்று ஆனதோ
ஆறவில்லை எம்துயர்

வாழ்வை வென்றுவிட்டேன் என்று
விண்ணுலகம் விரைந்துவிட்டீர்களோ
விடியும் பொழுதுகள் விழிநீரோடு
வாழுகின்றோம்

 நாம் வாழ்ந்த
காலம் கனவாகிப் போனாலும்
நினைத்துருகாத நாளில்லை
நெஞ்சில் நீங்கா நினைவுகளோடு

உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவரை பிரார்த்திக்கும்
மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தினர். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 02 Apr, 2022
நன்றி நவிலல் Sat, 30 Apr, 2022