யாழ்ப்பாணம் மார்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அலோசியஸ் ஞானம்பிரகாசம் அவர்கள் 31-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அலோசியஸ் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தநாயகி சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,
டொறிஸ்(பிறேமினி), ஜொய்சி சவுதாமினி(குடும்பநல உத்தியோகத்தர் பிரதேச வைத்தியசாலை உருத்திரபுரம்), அன்ரன் ராஜேந்திரா(ரஞ்சித், சிக்கன கடனுதவிச் சங்கம், கிளிநொச்சி), குகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ்குமார்(நீர்ப்பாசனத் திணைக்களம்), செல்வரட்ணம்(சுகாதார திணைக்களம் கிளிநொச்சி), கலாவதி, குலக்கோதை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மேரி திரேசா, காலஞ்சென்ற மேரி அக்னஸ், அருட்பிரகாசம், லில்லி மார்கிரட், காலஞ்சென்ற அன்ரனி, அரியமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிரட்ணம், பெர்னதேற் இராசாத்தி, யோசேப், கிறேஸ்லீலா, ஜெயராசா, தனம் மற்றும் கிறிஸ்து யோகராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எழிலன், பவிசாளினி, தர்சிகா, சஸ்மிகா, தரங்கினி, கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்று பின்னர் ஆனந்தநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.