Clicky

15 ஆம் ஆண்டு விண்ணக வாழ்வின் நினைவில்
அன்னை மடியில் 12 MAR 1926
இறைவன் அடியில் 22 DEC 2008
அமரர் மரியாம்பிள்ளை அல்பிரெட் (பொன்ராசா)
வயது 82
அமரர் மரியாம்பிள்ளை அல்பிரெட் 1926 - 2008 கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை அல்பிரெட் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அப்பா, மாமா, தொட்டப்பா வின் 15ம் ஆண்டு விண்ணக வாழ்வின் நினைவில்

அனைவரையும் தாங்கும் ஆலமரமென வற்றிருந்த எம் தந்தையே எம்மை ஆறாத்துயரில் மூழ்கவைத்ததேனோ அன்போடும், அறிவோடு, உண்மை, நேர்மை, ஒழுக்கம் போன்ற உயரிய குணங்களுடன் இறைபக்தியையும் உம் வாழ்நாளில் கடைப்பிடித்து இறுதி மூச்சுவரை உம் துன்பங்களையே இறைவனுக்கு அர்ப்பணித்து உங்களையே உருக்கி எம்மை வளர்த்தீர்கள். உங்கள் வாழ்க்கை என்றுமே எமக்கு ஒளிவிளக்கு அணையாத ஜோதி, எமக்காய் உம்மையே தந்தீர் மரியன்னையின் மாண்பினை எமக்குப் போதித்து அவர்களின் அரிய சேனையின் தலைவனாய் விளக்கினீர்கள்.

மனைவிக்கேற்ற மணவானாக மாண்புடன் அரிய பணிகளை ஆற்றி அல்லும் பகலும் அவவுடனே ஒன்றினைந்து வாழ்ந்தீர்களே பெண்களோடு பிறந்து பெண்களையே பெற்றும் எம்மை போற்றி பெருமையாக வளர்த்தீர்கள். பெண்களைப் பெற்றதால் நாலு ராசாக்கள் வருவார்கள் எனக் கூறி செயற்படுத்தினீர்கள்.

போற்றுதற்குரிய நற்குணங்களைக் கண்டவர் அரிய பொறுப்புக்களை உம்மிடம் தந்தனர் யாவையுமே சிறப்புடன் செய்தீர்கள். கஷ்ர துன்பங்கள் வாழ்க்கையில் வந்திடினும் ஓயாது இறைபதம் இரஞ்சி எம்மை சீருடனும், சிறப்புடனும் வளர்த்தீர்கள், எல்லோருக்கும் உத்தமனாய் நல்வழிகாட்டியாய் மருமக்கள் எல்லோரையும் நல்வழிப்படுத்த அரும்பாடுபட்டீர்களே, ஒவ்வொருவரும் எத்துறையை அணுகினால் முன்னேறலாமென வளப்படுத்த அறிவுரை இயம்பினீர்களே, எம் உடலில் ஓர் துன்பம் நெருங்காது காத்தீர்கள்.

உங்கள் உடலில் இறுதியில் ஓயாத வேதனை ஏற்று இறையன்பிற்கு சான்றாகி இறை கழ் பாடுகையில் யாவையும் மறந்து புன்னகை உதித்தீர்களே அப்பா.

இறுதிச் செபத்தை தருவானவர் வேண்டிய போதும் உங்கள் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து இரு கரங்களையும் கூப்பி நன்றி கூறி மகிழ்ந்து புன்னகை புரிந்தீர்களே. எப்படித்தான் உங்களை மறப்போம் அப்பா. என்றுமே ஆறுதில்லை உம் பிரிவு எண்ணாமல் நீங்களும் இறைவனிடம் பறந்தோடினீர்களா? விண்ணுக வாழ்வே முடிவில்லாதது நிச்சயம் என எடுத்து இயம்பவோ இறைவனுடன் இரண்டறக் கலந்தீர்கள் அப்பா.

எம் அன்புத்தந்தை நோயுற்றபோது பல்வேறு வகையில் எமக்கு ஆதரவு தந்து அவருக்கு அருகே நின்று உணவூட்டி ஒத்தாசை புரிந்தவர்களுக்கும் ஆறுதல் மொழி கூறுய அனைவருக்கும் ஆன்மீக முறையில் உதவியவர்களுக்கும் அப்பா மறைவுச் செய்திகேட்டு உடன் ஓடிவந்து சகல விதத்திலும் ஒத்தாசை புரிந்தவர்களுக்கு எம் இல்லம் தேடிவந்து உதவியவர்களுக்கும். இறுதித்திருப்பலியில் பங்கு கொண்டு சகல விதமாக ஒத்தாசை புரிந்தவர்களுக்கும் எமக்கு ஆறுதல் மொழி கூறியவர்களுக்கும் எல்லா வித உதவி புரிந்தோர் அனைவருக்கும் எம் உளம் நிறைந்த நன்றிகள் கூறுகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices