யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாகிறேட் பெனடிக்ட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
"நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்"
-(தி.பா.23:6)
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 12-07-2023 புதன்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் புனித பிரான்சிஸ்கு சவேரியார் ஆலயத்தில் நடைபெறும் இரங்கல் திருப்பலியில் கலந்து செபிக்குமாறும், அன்னாரது இல்லத்தில் நடைபெறும் காலை போசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
இவரின் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள். பேரப்பிள்ளைகள்.
வீட்டு முகவரி:
19, தேவாலய வீதி, திருநெல்வேலி.
Rest In Peace Familie Keethapongalan