Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 OCT 1953
இறப்பு 21 SEP 2025
திரு மனுவேல்ப்பிள்ளை மரியநாயகம்
முன்னாள் தபால் அதிபர், கல்கமுவ, வவுனியா
வயது 71
திரு மனுவேல்ப்பிள்ளை மரியநாயகம் 1953 - 2025 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, வவுனியா பெரியதம்பனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனுவேல்ப்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவேல்ப்பிள்ளை(அதிபர்) மற்றும் அருள்மேரி தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரிசறோஜா(ஓய்வுபெற்ற அதிபர்), காலஞ்சென்ற அன்னமலர்(ஆசிரியர்) மற்றும் அருளானந்தம்(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் T.O FORUT), சேவியர் தனிநாயகம்(USA), அன்னபாக்கியம்(ஓய்வுபெற்ற C.C, நெடுந்தீவு பிரதேச செயலகம்), அன்ரன் திருச்செல்வம்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணபதிப்பிள்ளை, மனோரஞ்சினி, சத்தியசோதி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்சினி-வில்சன், ஜெகதீபன், நவதீபன்-ரூபி, காலஞ்சென்ற ஜனாதீபன் மற்றும் துஷ்யந்தினி ஆகியோரின் அன்பு P.M மாமனாரும்,

சாந்தினி-அமுதன், நிசாந்தன், Dr. துஷியந்தன்- Dr. மஞ்சுளா, நிரோ-கதுசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அருணன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

ரிஷி, கௌசி, நெனிஹா, அனானி, வைஷ்ணவி, ஆதி, ஒமேஸ், ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி ஆராதனை 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித சவேரியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கட்டிராம்சல்லி சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சறோஜா - சகோதரி
சேவியர் - சகோதரன்
அருளானந்தம் - சகோதரன்
பாக்கியம் - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest Condolences From Nagendram kunguppilai and Nagendram Surenthini- Jaffna

RIPBook Florist
Canada 1 month ago

Photos

Notices