யாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனுவேல்பிள்ளை யேசுரட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமைத் தந்தையே
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எம்மை விட்டு பிரிந்திடவே உந்தனுக்கு
என்றும் மனம் வராது
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
பத்து ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பா!
இறையடி சேர்ந்து பத்தாண்டுகள் நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும்
எங்கள் குடும்ப விளக்கு!!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி..!
பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும் உங்கள் நினைவால்
சொந்தம் அழுது உருகுதப்பா..!
ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும் உங்களின்
எண்ணங்களும் செயல்களும் எங்களுடனே
பயணிக்கும் அப்பா
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!