Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 16 MAR 1930
விண்ணில் 27 JUN 2013
அமரர் மனுவேற்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
வயது 83
அமரர் மனுவேற்பிள்ளை அந்தோனிப்பிள்ளை 1930 - 2013 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்டதரிப்பைப் பிறப்பிடமாகவும், கரம்பொன்னை வாழ்விடமாகவும், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனுவேற்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ளா அப்பா...!
ஆண்டுகள் பத்தாகியும்
உங்கள் பிரிவின் துயர் ஆறவில்லை
வடியும் கண்ணீரும் ஓயவில்லை

பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடன் நேர்மையாய்- நாம் வாழ
வழிதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டுச் சென்றதேனோ?

"காலங்கள் கடந்து போகும்- ஆனால்
காலம் ஆனவரே பாசமான பப்பா
காலந்தனை வென்று எம் மனதில்
காட்சிகளாய் என்றும் வாழும் உங்களுக்கு
எம் கண்கள் நிறைந்த கண்ணீர் மலர்கள்
காணிக்கை..!

இன்றுடன் ஐயிரண்டு ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.

முடிவில்லை வாழ்வை உங்களுக்கு
அளித்து தன் அரவணைப்பில் பாதுகாக்க
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம். 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: வில்லா(அ.யூட் வில்வராஜ்), குடும்பத்தினர்