Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAR 1935
இறப்பு 04 SEP 2020
அமரர் மனோன்மணி சிவராமலிங்கம் 1935 - 2020 மலேசியா, Malaysia Malaysia
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடி, அனுராதபுரம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சிவராமலிங்கம் அவர்கள் 04-09-2020  வெள்ளிக்கிழமை அன்று பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மழவராயர் சின்னத்தம்பி, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அப்பாப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவராமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தயாளினி (இலங்கை), தயாரூபன்(நியூசிலாந்து), லதாளினி(கனடா), அருட்செல்வன்(கனடா), தயாபரன்,  பிரபாகரன்(அவுஸ்திரேலியா), சுதாகரன் (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கராஜா, நாகவதனி, சிவபாலன், கலைமகள், நிருபா, வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற போல் மார்க்கண்டன், கமலாம்பிகை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அஞ்செலா, சங்கரப்பிள்ளை, சண்முகநாதன், சிறீ, வரதராஜன் மற்றும் தர்மலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சேதுலிங்கம், சிதம்பரநாதர், சின்னக்குட்டி, பறுவதம், நாகம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிருதுஷா, பவிசாந்த், ஷோபிக்‌ஷனா, பிருந்துஜா, யனுக்‌ஷனா, துலக்‌ஷா, சயிந்திரா, அர்ஜூன், லக்‌ஷ்மி  ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்