

யாழ். கோண்டாவில் மேற்கு முத்தட்டுமட லேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து Auckland ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி சேனாதிராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அம்மாவை நினைக்காத நேரமில்லை
எங்களிடம் இருந்து உங்களை பிரித்தவனுக்கு
நெஞ்சில் ஈரமுமில்லை
உங்களை நினைக்கையில் மனதிலே பாரமுமில்லை
ஆண்டு ஐந்து சென்றாலும் இன்னமும் நாங்கள்
அழுது ஓயவில்லை
இருளில் இருந்து எங்களுக்கு ஒளியை தந்தீர்கள்
பயந்த எங்களுக்கு துணையாக இருந்தீர்கள்
அம்மா எங்களைப் பிரிய மனமின்றி பிரிந்து சென்றீர்கள்
நீங்கள் போகும்போது எங்களின்
நிம்மதியை எடுத்துசென்றீர்கள்....!
இது போன்ற வேதனையை
எங்களால் நினைக்க முடியவில்லை
மனதில் அழுகிய விதைகள்
மீண்டும் முளைக்கமுடியாது
அம்மா உங்கள் பாசத்தையும் பிரிவையும்
யாராலும் புதைக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Our deepest condolences. From: Vivekananthan (Friend and former Lanka Cement colleague), Toronto Canada.