3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மன்னார் இலுப்பைக்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி சரவணமுத்து அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு மூன்று ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
கலப்படம் இல்லா உன் அன்பு
கலங்க வைக்குது எனை இங்கு
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்